கவிக்குயில்கள்: 2010

S

முதல் காதல்; கடைசி தோல்வி

உன் வழியோடு நான் காத்திருக்க
நீ பாதை மாறிப் போனதென்ன!
உன்னைத் தேடி பயணப்பட்ட என்
கண்கள் முற்புதரில் விழுந்ததென்ன!!

காய்க்கா மரக் கிளைகள் இருந்தென்ன
பயன்; உன்னை நினைக்கா என் மனம்
இறந்தால் தான் புரியும் அது
உண்மை காதலென்று!!!

சுழன்று வந்த சூறாவளியை எதிர்த்து
நின்ற தேகம்! நீ மறுத்துவிட்ட கனம்
உடைந்து சிதறிய நெஞ்சம்!! - உன்
வழி நான் தொடர

விருப்பமில்லை; இருந்தும் உன் விழிகள்
மறக்க முடியவில்லை இப்படி ஒரு
பிறவி ஏன் பிறந்தேன் - நான்
இறந்த பின் எரித்துவிட கேட்கின்றேன்

முன்னதாக அவளிடம் புதைந்து விட்ட
என்னுடலை!! - அவளிடம் ஒன்று மட்டும்
கேட்கிறேன் மறந்து விட்ட காதலை உன்னால்
மறைக்க முடியுமா யென்று!!!

உன்னை மறந்து விட்டேன்

தினம் தினம் கனவினில் சிலையாய் வருவது
நீ தானே!! உன்னை பிரிந்து வாழ்ந்தாலும்
உள்ளுக்குள்ளே ஓர் உணர்வு

காதலை தூண்டித் தூண்டி மெல்ல மெல்ல
துடித்துக் கொண்டே நடிக்கின்றது உன்னை
மறந்து விட்டேன் என்று!!

எதற்காகவோ என்னை அழைத்தாய் என்
கைபேசியில்! யாருடானோ பேசுவது போல்
பேசினேன்!!

காதலை பற்றி இருவருமே பேசவில்லை - அதை
நீ மறந்துவிட்டது எனக்கு புரிந்தது; தொடர்ந்து
பேச முடிய வில்லை!!

உன் அழைப்பை தவிர்க்கவும் நினைக்கவில்லை 
எதற்க்காக என்னை அழைத்தாய்; நிலை
தடுமாறி அழையவைத்தாய்!!

உறக்கத்தை விழுங்கிய ராத்திரிகள் தினமும்
காதலை தூண்டித் தூண்டி மெல்ல மெல்ல
துடித்துக் கொண்டே நடிக்கின்றது உன்னை

மறந்து விட்டேன் என்று!!

அழகிய தென்றலவள்

அழகிய தென்றலவள் அனுதினமும் அவளை
நேசித்தேன் இதுதான் காதலென்று அவளையே
சுவாசித்தேன்

அன்போடு அறவனைத்தேன் தினமும் புதிதாய்
அவதரித்தேன். மூச்சு விடக்கூட யோசித்தேன்
அவளுக்காகவே

சேமித்தேன்...தொட்டுபார் என்ற அவள்
கண்களிடம் விழகியே நின்று பேசினேன்
அவள் விரல் பட்ட

இடமெல்லாம் வலியின்றி துடித்தேன் அழகிய
தென்றலவள் வாழ்வெனக்கு தருவாள் என்றிருந்தேன்
இப்படி வலியோடு தான்

தருவாள் யென்று நினைக்கவில்லை.
"என்னை மறந்து விடு யென்று"

அன்பிற்காக

நினைத்துப் பார்ப்பாயா நாள் ஒன்றுக்கு
ஒரு முறையேனும் என்னை...

தேடி பார்க்கின்றேன் நீ நினைவில்
இல்லாத நாட்களை என்னுள்ளே...
நம் அறிமுகம் இல்லாத நாட்களே அவை...!

நித்தம் உன் நினைவுகள் தான் அன்பே
நிஜமாய் சொல்கின்றேன்
உனக்காகத் தான் வாழ்கின்றேன்...

அன்று!...
உன் நினைவுகளுடன் ஆற்றங்கரையில்
மாலைப் பொழுதை
கழித்திருக்கின்றேன்...!

இன்று...!
ஆற்றங்கரையோற மரக் கிளிகள் கேட்டது
எங்கே அவள் என்று!
அவற்றிக்கு தெரியாது நீ பிறிந்து போனது....

என் நிலை இன்று மாறிப்
போனதோ? - நம்மில் பிழை யாரிடம்
என்பதில்லை!

உன் அம்மாவிற்காக நீ - உன்
அன்பிற்காக நான்...!

மழலை

உன்னை நான் பெற்றெடுக்க என்ன தவம்
செய்தேனோ? தாய்மை என்பதே பெண்
பிறவியின் பெருமை தானே அதை உன்னால்
அடைந்தேன்...!

மகனே நீ வாழ்க பல்லாண்டு, உன் மழலை
மொழியை நான் கேட்டிருக்க என்னுள் எதனை
இனிமை எதனை இனிமை. சின்ன சின்னதாய்
இம்சைகைகள் செய்து

தவழ்ந்து கொண்டே ஓடி மறையும் உன்
சுட்டி வேலைகள் தாழாமல் நான் பொய்
கோபம் கொண்டு உன்னை மிரட்ட
என்னவென்றே

புரியாமல் என்னை பார்த்து மலர் மொட்டு
கண்களோடு நீ சிரிக்கையில் என்னுள் எதனை
இனிமை எதனை இனிமை. இனியும் ஒரு
இன்பம்

வேண்டாம் உன்னை தவிர - இன்ப கடலில்
மூழ்கி நான் கண்டெடுத்த முத்தே
உன் சுவத்தில் என் மூச்சும் கலந்திருக்கும் உன்
ஆசைகளில்

என் அனுபவமும் உடன் இருக்கும் -இனி ஒரு
பிறவி இருப்பின் அதிலும் நீ என் மகனாக
பிறக்கும் வரம் வேண்டும் -
உன் மழலை

மொழியை நான் கேட்டிருக்க என்னுள் எதனை
இனிமை எதனை இனிமை!!!

நெருஞ்சி முற்கள்

உனக்கென்ன சொல்லிவிட்டாய்
பிரிந்து விடலாம் என்று
வலி எனக்குதான் தெரியும்.

நெருஞ்சி முற்கள் கொண்டு இதயத்தை
கீறிவிட்டாய் வலியோடுதான் துடிக்கின்றது
இதயம் ஒவ்வொரு நொடியும்.

அழுது புலம்ப என்னில்
கண்ணீர் இல்லையடி என் உயிரே என்னை
கொன்று விட்டதா?

வலியோடுதான் துடிகின்றது இதயம்
ஒவ்வொரு நொடியும்!!!

மௌனமான நேரம்

மௌன மொழியின்
அர்த்தங்கள் பல நூறு,
அதை இடம் பார்த்து 
அறியாவிடில் பொருளேது...!

இன்பமான நேரத்தில் மௌனம்
சம்மதம்!!

உண்மையான சொந்தங்கள்
பிரியும் போது மௌனம்
துன்பம்!!

காதலில் மௌனம்
சித்ரவதை!!

தோல்வியில் மௌனம்
பொறுமை!!

வெற்றியில் மௌனம்
அடக்கம்!!

இறுதியில் மௌனம்
மரணம்!!

தினந்தோறும்

காகித ஓடம் கரை சேருமா கண்ணா
இனி என் பசியாறுமா? - பெற்றெடுத்த பிள்ளைகள் 
மாடி வீட்டிலே தூக்கி வளர்த்த கைகள் குடிசை
வீட்டிலே தாய் பாடிய தாலாட்டெல்லம் குப்பை
மேட்டிலே..!!

வாழ்க்கை ஒரு வண்டி சக்கரம் தானடா புத்தனும்
சித்தனும் கற்றது தானடா வாழ்கை மகனே
நீ வாழ்க பல்லாண்டு என குடிசை வீட்டு

பூந்தொட்டி மாடி வீடு பண மரத்தை பார்த்து வாய் மனக்க வாழ்த்தி வந்தமர்ந்தது தன்
இருப்பிடம் தேடி

வேலையை தொடங்கியது கால்வயிறு கஞ்சி குடிக்க
"ஐயா பிச்சை போடுங்க" என்று
தினந்தோறும் என் பேருந்து பயணத்திற்கு
முந்தைய காட்சி இது

பட்டொளி வீசி பறக்கட்டுமே

தேசம் பிழைத்தது நமக்கு புது நேசம் கிடைத்தது!! -
கத்தியின்றி ரத்தமின்றி அகிம்சை மந்திரம் கொண்டு
மூவர்ணக் கொடி பாதி வானில் பறக்கும் அழகு பாரீர்

என் பாரத தாய் மூவர்ண சேலை கட்டி
ஒய்யாரமாய் பாரத புகழ் பாட ஆழ்கடல்
சங்கொன்று முழங்குது பாரீர்!!!

காவி நிறம், தூய்மையையும் கடவுளையும்
வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும்
பச்சை நிறம், புணர்ப்பையும், செம்மையையும்

எடுத்துரைத்து வர்ணகொடி ஏருது பாரீர்....
அர்த்தமில்லா வெள்ளையன் கொடி இறங்குது பாரீர்
வெள்ளை புழுக்களை ஓட ஓட சுட்டெரித்த

சூரியன் பாரதியும், அகிம்சை கொண்ட காந்தி மகானும்;
ஆங்கிலவனை எதிர்த்து எதிர் வணிகம் செய்த
கப்பலோட்டிய தமிழனும் பாரத தாயின்

ஒற்றை பிரசவ பிள்ளைகள்; அது மட்டுமா
பஞ்சாப் சிங்கன், தமிழ்நாட்டில் திருப்பூர் குமரனும்
அவளுக்கு சுக பிரசவம் தான் - இவர் தம்

முயர்ச்சிதனில் பெற்று வந்த பேறு நம் தேசிய
கொடி பட்டொளி வீசி பறக்கட்டுமே சுதந்திரமாய்!!
பெற்ற சுதந்திரத்தை காத்திடுவோம் நிரந்திரமாய்!!!

தமிழா! தமிழா!

கல்லுக்கு உளி கொண்டு
வலி கொடுப்போம் - சிலை ஒன்றை
வடித்தெடுப்போம்!

சொல்லுக்கு கவியென்று பெயர்
கொடுப்போம் - கரு மை
கொண்டு எடுத்துரைப்போம்!

வயல் சேர் கொண்டு கால் நனைப்போம்
வலக் கரம் கொண்டு சோறெடுப்போம்!
நற் சொல்லொன்று கூறிடுவோம் - சங்கே
முழங்கென்று பாடிடுவோம்!

செம்மொழியாம் எம்மொழி தங்கத் தமிழன்
நாமென்று பாடிடுவோம்!
பாரதி; கண்ணதாசனும் கம்பனும் எம் நாடென்று
நா மணக்க நாம் உரைத்திடுவோம்!

கமகமக்க வாய்ருசிக்க வந்தோர்க்கு விருந்தொன்று,
படைத்திடுவோம் எந்நாடென பிறநாட்டவர் கேட்டால் - நாம்
வாழ்வது தமிழ் நாடென
மார் நிமிர்த்தி சொல்லிடுவோம்!

என் இரண்டாவது மரணம்

மது கொண்டு மங்கையை மறக்க சிறு முயற்சி -
மரணத்திற்காகவும் தான்!!!

நீ மறந்து போ! என்றதும் மரணித்துப் போனது
என் ஜீவன் அன்றே!

ஊண் கொண்டு உடல் மட்டும் வாழ்கின்றது. - இனியவளே என்

இரண்டாவது மரணம் நீ அறியாமலே ஆகட்டும்
சிதையூட்டிய என்னுடல் கண்டு நீ
அழுவது கூடாது கண்மணியே!!

உனக்காக நானிருக்க

என் காதலா என்றுரைத்த வார்த்தைகள் இன்றும்
ஒலித்துக்கொண்டு தான் இருக்கின்றது - உன்னை பார்த்த
நாட்களை விட உன்னுடன் பேசிய வார்த்தைகள் அதிகம்
என் செல்பேசிக்கு தெரியும் அந்த மணி கணக்கு!!!

நாளொரு பொழுதாய் என்னை விட என் செல்பேசி அதிகம்
எதிர் பார்த்தது உன் அழைப்பு மணி ஒழிக்க.
பூவிதழ் விரிந்த வார்த்தைகள், தாமரையாய் மலர்ந்த முகம்
பார்க்க துடித்த கண்கள் பழகிப்போன பாசைகள் மிச்சம் வைத்த
முத்தங்கள் தலைகோதும் விரல்கள்...அடடா

"பார்க்கணும் போல இருக்குனு" அழுது கொண்டே சொன்னாயடி
அன்று பார்த்திருந்தால் இன்று பிரிந்திருபோமா? - விழிகளில்
வழியும் கண்ணீரை தடுக்க முடியவில்லை...இன்னும் அழுது
கொண்டு தான் இருக்கின்றேன்!!! - அன்புள்ள காதலியே

கண்ணீரில் மிதந்தாயடி காற்றோடு கரைந்தாயடி கனவினில்
நிலைத்தாயடி ஆறுதல் சொல்ல யாரும் இல்லை...
எதற்காகவோ அன்று நீ சொன்ன "அழாதே உனக்காக
நானிருக்கையில்" எனும் வார்த்தைகளே இன்று ஆறுதலாய்!!!

எனக்கு மட்டும் ஏன் மரணம்

அன்பே என் அன்பே என்றுரைத்த இதழ்களில்
மறந்து விடு என்று நெருப்பினை கொட்டி விட்டாயடி!!
எரியுது எரியுது என்னுடல் உயிருடன் எரியுது

வலியிது வலியிது காதல் போகும் வலியிது!!
"நம் மரணம் கூட ஒன்றாகத்தான்" என்றவள் வார்த்தையில்
நெருப்பின் அனல்கள் மறந்து விடு என்று!!!

இரண்டு உடல்களின் நான்கு இதழ்களில்
முத்தமிட்ட சத்தம் கூட இன்னும் மறையவில்லை
எனக்கு மட்டும் ஏன் மரணம் தந்தாயடி?

இயற்கையாய் வாழ கற்றுக் கொடுங்கள்

இயந்திரம் இல்லா புது வாழ்வை தேடித் தாருங்கள்
இயற்கையாய் வாழ கற்றுக் கொடுங்கள்!!!

நாள் முழுதும் கணினித் திரையில் கண்பதித்து
தொலைத்துவிட்ட வாழ்வை கொடுங்கள் - அன்று
அம்மாவின் மடியில் படுத்துறங்கிய
எத்தனையோ ராத்திரிகள்!!

தாத்தாவின் தோள் மேலேறி கண்ட திருவிழாக்கள்!!
மணல் வீடு கட்டி விளையாடிய நாட்கள்!!
வேண்ட வெறுப்புடன் புத்தக மூட்டை சுமந்த
பள்ளி தருணங்கள்!! - இன்றும் நம் கால்தடம்
மறையாத கல்லூரிச் சாலைகள்...!!!

இவை எல்லாம் தூக்கி எரிந்து இயந்திர வாழ்வில்
குடி புகுந்தோம்...சொந்தங்களை மறந்த தொலைதூர
பயணம் தாண்டிய வேலை!!!

தொலைபேசியில் அம்மாவின் குரல் கேட்டுத்தான்
ஆறுதல் அடைய வேண்டுமா?
இயந்திரம் இல்லா புது வாழ்வை தேடித் தாருங்கள்!!
இயற்கையாய் வாழ கற்றுக் கொடுங்கள்!!!

வளர்ச்சி!!

வளர்ந்து விட்ட வின்ஞானம் மறந்து போன
மெய்ஞானம் நம்மில் இன்று கற்பனைக்கு
எட்டாத வளர்ச்சி!!

படுக்கையறை காட்சிகள் 70 MM வெள்ளித்திரையில்
..ம்..ம்..நல்ல வளர்ச்சி - டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாரும் இல்லை!! கம்பனையும்
ஓரம் கட்டிய கற்பனை வளர்ச்சி!!

கம்பனுக்கும் பாரதிக்கும் அன்றில்லாத ரசிகர் மன்றம்
குப்பனுக்கும் சுப்பனுக்கும் இன்று உண்டு ..ம்..ம்..
நல்ல வளர்ச்சி!!!

சின்னத்திரையில் நீயாட நானாட நம்மை பார்த்து
எதிர்கால இந்தியா திண்டாட - இந்நிலை நீண்டால்
2020 கலாம் கண்ட கனவு?! - அவர் விழித்துக்கொண்டு
கனவு கானுங்கள் என்றார்!!

இன்னும் மூடிய விழிகளை திறக்காத இளையவர்களே
எழுந்திருங்கள் வல்லரசாக வாழ அடி எடுங்கள் - அந்த
இளைஞனின் கனவு நனவாகட்டும்!!!

!அழகு!

உதடுகளில் உண்மையும்!

கண்களில் நம்பிகையும்!

முகத்தில் புன்னகையும்!

கைகளில் உதவியும்!

உள்ளத்தில் அன்பும் மனிதனுக்கு

உண்மையான அழகு!

மறவாது கண்மணியே!!

உயிரானவள் சென்றுவிட்டாள்...என்
உயிரை கொன்று தின்று விட்டாள்....
உயிர் இல்லாத இதயத்தை காதலித்தேன்...

எனக்கு உறக்கம் இல்லாத ராத்திரிகளை
பரிசளித்தாய் - மறந்து விடு என்றுரைத்தாய்...
நானோ உன் உடலை நேசித்திருந்தால் நொடிப்பொழுதில்
மறந்திருப்பேன்...உன் உள்ளத்தை நேசித்தேன்...

நம் காதலை மறக்க முடிய வில்லை....இன்று நீ எங்கோ,
யாருடனோ வாழ்ந்தாலும் என்றும்
உண்மை காதல் மறவாது கண்மணியே!!

எப்பொழுதாவது என்னை நினைத்து பார்... உன் கண்களில் வடியும் ஒரு துளி கண்ணீர் சொல்லும் என் காதலை!!!

இறைவன் எங்கே!!

இருக்கும் இடம் தெரியாத இறைவன் எங்கே!!
தூக்கியெரிந்த சுனாமி அலையின் கொடூரத் தாண்டவம்
தடுக்க வரவில்லையே - எங்கே போனார் இறைவன்.

வாய் பிழந்த பூமிக்குள்ளே புதையுண்ட உயிரை
காக்க வரவில்லையே - எங்கே போனார் இறைவன்.

நெருப்புக்கு இறையாகி அடுப்புக்கரியான பிஞ்சு குழந்தைகளை
அணைக்க வரவில்லையே - எங்கே போனார் இறைவன்.

இருக்கும் இடம் தெரியாத இறைவன் எங்கே!!
இந்த அவலங்களை காண அவருக்கு கண் இல்லையா?

அவலக்குரல் கேட்க அவருக்கு காதில்லையா? - இல்லை
தொட்டுத் துலங்காத படையல் அருந்தி உறங்கி ஓய்வெடுகின்றாரா?

இருக்கும் இடம் தெரியாத இறைவன் எங்கே!!

மழை

மாலை நேர பூஞ்சோலையில் தோகை இலமயில்கள்
ஆடக்கண்டேன்...அன்னார்ந்து வானம் பார்க்க - கருத்த
மேகங்கள் மழை பொழிய காத்திருக்க கண்டேன்...!

அதோ....காற்றோடு விளையாடி கற்பனையில் கவி
பாடி கண் எதிரே தோன்றிய மழை
வந்துவிட்டதே...
என் உடல் நனைந்ததே உள்ளம் குளிர்ந்ததே!
இறை தேடியலைந்த பறவை கூட்டமும், தன் உறவோடு அசைந்தாடிய மயில்களும் தம் உறைவிடம் தேடிய வேலை....

இந்த அழகிய பூ மழையில் நனைந்தனவே
நானும் நனைகின்றேன் இன்னமும் கொஞ்சம் வான் மழையின்
கடைசித்துளி வரையில் நானும் நனைகின்றேன்...

நட்ப்புக்காக....

நண்பனுக்கு ஒரு செய்தி சொல்ல
தேர்ந்தெடுத்த நாள் இன்று.
நன்றெனப் பிறந்தாய்
இன்று வரை நிலைத்தாய்....

நாளையும் உனக்காக தான் - இன்று வரை
நீ சாதித்தது யாதென்றால்...இறைவன்
உனக்களித்த சோதனைகளை தாண்டி வந்து
அகவை இருபத்தி மூன்றென

அடியெடுத்து வைத்தாயே அதுவன்றோ. - மேலும்
நீ பிறந்தது சாதனை, எங்கள்
நெஞ்சில் நிறைந்தது சாதனை...

இன்றைய நாள் புதிதாய் தொடங்கட்டும்
இனி ஒரு விதி செய் உனக்கென்று வழி பிறக்கும்..
தோழ் கொடுக்க நாங்கள் உண்டு. - உன்
தோழமை சிறந்து நீ வாழ்க பல்லாண்டு
என வாழ்த்துகளுடன் கவிக்குயில்கள்....

அடே நண்பா

நெஞ்சுக்குள் இருக்கும் இன்பம்,
இதயத்தில் இடியாத இமயம்,
காற்றில் கறையாத பனிமலை,
கண்ணில் தெரியும் காவியம்,
கற்பனைக்கு எட்டாத ஓவியம்,
என்றும் அது,
நண்பா உன் நட்பு மட்டுமே..!

!....பாரதி....!

வான் புகழ் கொண்ட வள்ளோன் கவிபாடும்
வல்லமை கொண்ட கலைஞன்
இவன் பாடும் குரல் கேட்டு
மலைத்து நிற்கும் அலைகளெல்லாம்!

தமிழ் சொற்களை கவிச் சிற்பமாய்
செதுக்கிய சிற்பியாவான் - நீண்ட நெடு
வானமும் அளவில்லா வையகமும் மறந்திடா
நிலைகொண்டு மறைந்திட்ட கவிச்செம்மல்...

உள்ளத்தில் ஊற்றெடுக்கும் வார்த்தையால்
வாழும் நெறி வகுத்த வள்ளுவனோடு இவன் ஒப்பாவான்
தொற்றனை தூறும் மணற்கேணி இவனை
கற்றவற் கூறும் அறிவுக்கேணி - அத்தகையவன்

அமர கவி எனும் பாரதியென்ற கவிஞன் ஆவான்
இவ்வையகத்தில் இவனை போல யாரும் இல்லை
இனியெவரும் இங்கு பிறப்பதற்கில்லை.....!

கால் கொலுசு

அவள் கொலுசின் இசை கேட்டு
எப்பொழுதாவது  துடிக்கும் என் இதயம்...!

என் மனம் விழுந்து கிடப்பது இந்த  இசையில்
தானே....!

அவள் பிரிந்து சென்றதில் இருந்து
அதுவும் இல்லை....!

யாரோ ஒருவரின்  கொலுசின் சத்தம் கேட்கும் பொழுது  வளின் நினைவுகளால்...எப்பொழுதாவது துடிக்கும் என் இதயம்...!

அம்மா....!

பிறக்கும் போது நானும் அழுது

அவளயும் அழ வைத்து - காரணம்
இல்லாமல் அன்பை சுமந்து
என் கட்டுடல்
வளர்த்து கருத்துடன் என்னை
காப்பவள் என் அன்னை
அவளுக்கு என்ன செய்தேன் -

நான் நொடிக்கு ஒருமுறை
'அம்மா' என்று  அழைத்ததை தவிர...
அவளும் எதிர்பார்க்க வில்லை.

ஓ...அவள் தானே அம்மா....!

அழுகின்றேன்

நீ அருகில் இருக்கும் போதெலாம்
காரணம் இல்லாமல் நான்
அழுகின்றேன் உன் விரல்கள்
என் கண்ணீர் துடைக்கும்
என்பதனால்...!

When i am with you

எழுந்து நட

விதி என்று எழுதி வைத்த
ஒன்றை மதி கொண்டு
வெல்வோம்...எழுந்து நட
நண்பா வெற்றி உனதாகட்டும்..!

நினைவுகள்

நிஜத்தை போலாவே நிழலும்
சுகமானது..!
உன்னை போலவே உன் நினைவுகளும்
சுகமானது...!
நீ அருகில் இல்லை என்றாலும் உன்
நினைவுகள்
என்றும் என்னிடம் இருக்கும்...!

தவம்



நினைத்துக் கொண்டு இருப்பேன் என்று நீ நினைக்காதே....
இன்னும் உன்னை மறக்கவில்லை...நினைப்பதற்கு!...

உறக்கம் இல்லாத இரவுகளை கடந்து வந்து...பழகிபோனேன்..
உணவு இல்லாத உடலுடன் வாழ பழகிபோனேன்...
          உன்னை மறந்து வாழ முயற்சி செய்தேன்....முடிய வில்லை
          தோற்றுப் போனேன்... விட்டு போனது காதலி மட்டும்தான் என் காதல் 
          என்னை விட்டு போகவில்லை...
இருந்தாலும் அந்த வலியை ஏற்றுக் கொள்கின்றேன்... விடியும்
வரை காத்திரு...விதைதவள் நீ உறங்கி விடலாம்அந்த விதை என்னுள் உறங்காது...!

புது வசந்தம்

இன்று புது வசந்தம்
வசந்தங்கள் பிறந்தது இன்று
புது வாழ்வு தொடங்குது நன்று...!
வண்ண வண்ண பூக்கள் மலர்ந்ததே
சித்திரை மகள் பிறந்தது கண்டு...!

எம் மனம் மகிழந்தது தமிழா
உன் வாழ்வு சிறந்தது கண்டு...!
உங்கள் வாழ்வும் வளமும் என்றும்
வசந்த மலர்கள் மலர்ந்து - வளம் பெற
வாழ்த்துகள்...!
கவிக்குயில்கள் உங்களை அன்புடன் வரவேற்கின்றது....