கவிக்குயில்கள்: 2011

S

உன்னை மறந்து விட்டேன்

தினம் தினம் கனவினில் சிலையாய் வருவது
நீ தானே!! உன்னை பிரிந்து வாழ்ந்தாலும்
உள்ளுக்குள்ளே ஓர் உணர்வு!!

காதலை தூண்டித் தூண்டி மெல்ல மெல்ல
துடித்துக் கொண்டே நடிக்கின்றது உன்னை
மறந்து விட்டேன் என்று!!

எதற்காகவோ என்னை அழைத்தாய் என்
கைபேசியில்! யாருடானோ பேசுவது போல்
பேசினேன்!!

காதலை பற்றி இருவருமே பேசவில்லை - அதை
நீ மறந்துவிட்டது எனக்கு புரிந்தது; தொடர்ந்து
பேச முடிய வில்லை!!

உன் அழைப்பை தவிர்க்கவும் நினைக்கவில்லை 
எதற்க்காக என்னை அழைத்தாய்; நிலை
தடுமாறி அழையவைத்தாய்!!

உறக்கத்தை விழுங்கிய ராத்திரிகள் தினமும்
காதலை தூண்டித் தூண்டி மெல்ல மெல்ல
துடித்துக் கொண்டே நடிக்கின்றது உன்னை

மறந்து விட்டேன் என்று!!

என்னோட மகராசி


மனமுவந்து என்னை அவள் மமுடித்திருந்தாள் 

அவள் பாதங்களை என் கரங்களால் 
தாங்கியிருப்பேன்....

கருமேக கூந்தல் தலைதுவட்டி மலர்சூடி 
மகிழ்ந்திருப்பேன்...!

வேண்டிய பொருள் நினைக்கும் போதே 
கொடித்திருபேன்...!

கட்டிய சேலை கசங்காமல் 
அனைத்திருப்பேன்...!

பட்டு மேனி மெத்தையிட்டு  உடன் 
சேர்ந்திருப்பேன்...!

உறங்கும் போது அருகிலிருந்து மூச்சுகாற்றை
சேகரித்திருபேன்...!

கண்ணீருக்கு ஆறுதலாய்   என்னையே

கொடுத்திருப்பேன்...!

கை நிறைய வளையலிட்டு மெல்லிசை 
கேட்டிருப்பேன்!...

மகாராணி போல் நான் அவளை 
மதித்திருப்பேன்...!

மனமுவந்து என்னை அவள் மணமுடித்திருந்தாள்


மரணமென்ற தூது வந்தது....


இதயம் திருடியவளின் இனிய நினைவுகளை
நெஞ்சினில் சுமற்பதற்க்கு சுமையேதுமில்லை!
முகம் பார்த்து நான் பேச நிலம் பார்த்து நீ பேச
நடந்தேரிய முதல் சந்திப்பு, உன் விரல்
தொட்ட முதல் ஸ்பரிசம், காலத்தால் அழிக்க முடியாத
சுகமான நினைவுகளே!

நீயில்லா யென் வாழ்வில் காதல் நினைவுகளுடன்
பயணிக்கின்றேன் - மனதிற்குள் மணவாழ்வு கண்ட
காதல் இறந்து விடவில்லை நான் மறுமணம்
செய்துகொள்ள!!., உடனில்லாமல் போனாலென்ன
உயிரினில் இருக்கிறாய் - உடல்களுக்கு தான்
இந்த இடைவெளி!

உயிரினில் கலந்த காதல் காற்றாய், கடலாய், நிலமாய்
நெருப்பாய் வானமாய் பறவிக்கிடக்கையில் உன்னையேன்
நான் மறக்க நினைப்பேன்! - கண்களை தொலைத்துவிட்ட
பாதையில் வெளிச்சமின்றி பயணிக்கின்றேன் - நீயே
எனக்கு வழித்துணையாய்.!., தூக்கி எறிந்தயென் காதலை
தூசிதட்டிப் பார் உண்மை காதல் உனக்கு புரியும்!

மறந்துவிட சொன்னவள் காதலையேன் எனக்குள்
தரவேண்டும்! உன் நினைவுகளை அழித்து
என் இதயத்தை திருப்பிக் கொடு
மறந்துவிடுகின்றேன்!! பூ இதழ் விழிகள் எதிர் நின்று
மவுனப்புன்னகை மொழி பேசி உன் வலக்கரம் நீட்டி
துளி விசம் கொடு ஏற்றுக்கொள்கின்றேன்

வலியால் துடிக்கின்றேன் வழியின்றி தவிக்கின்றேன்!
உனக்காக இறந்துவிட நினைக்கிறேன்!

பிரியமான தோழிக்கு

தோழமை கண்டது மனதினில் நின்றது!
முகம் பார்த்ததில்லை நிறம் அறிந்ததில்லை,
நட்பென்ற வானில் பறந்து வந்த பறவை இந்த
பூவன சோலையில் வந்து குடியேறியதென்ன!

மகிழ்வித்து பேசி அழுகையைக் கூட நிறுத்தியிருக்க்றாய்
அன்பென்னும் ஆயுதம் வீசி!. அன்பிற்க்கு நிகர்
அம்மா என்றால் நட்பிற்க்கு நிகர் நீதான் தோழி!
எதிர் பாலாயிருந்தும் சிறு சீண்டல் கூட இல்லை!

காரணம் நட்பென்ற நன்நெறி வகுத்து
நடந்து செல்லும் நம் பாதை!
வாழ்வில் நல்லதொறு உறவு உண்டெனில் அது உன்
நட்பு தான் தோழி!

வெண்னிலா புன்னகை கொண்ட முழுமதியாய் நின்று
கோபத்தை கூட தூக்கி எறிந்தவள் தோழி நீ தானடி!
ஆறுதலாய் ஆயிரம் வார்த்தைகள் கூறும் உன் அன்பு
அள்ளியணைத்து மடிமீதிட்டு தாழாட்டும் அன்னையை போல

மகிழ்வுடன் வாழ்கின்றேன் தோழி உன் நட்புடன்!
சிறு குழந்தையாய் நீயிருந்து குழந்தை போலென்னை
மாற்றி மகிழ்வது தான் உன் சிறப்பு தவறுகள் மறைப்பதற்கும்
மன்னிப்பதற்கும் இங்கு இடமில்லை சொல்லி திருத்தி நல்வழி
நடத்துவது உன் அழகான நட்பு!

மணமாலை தோழ் சேர காத்திருக்கும் மனிக்கொடியே
உன் மனம் போல் மன்னவன் வந்தமைய ஆண்டவன்
அருள் புரியட்டும்!

நல்லதொரு நாளாய் இன்று பிறந்த நாள் கானும் நீ
இன்முகமாய் என்றும் வழ்க வளமுடன் யென வாழ்த்தும்
உன் இனிய தோழமை!




பாதி இதயம்


உறக்கமின்றி இரவு நகர
உயிரே...உயிரென ஓர் உடல்
சப்தமில்லாமல் துடித்திருக்க
கேட்டதோ குரல் அவள் செவிகளிலே...
புரண்டு படுத்திருப்பாள் அக்கணம்...!

அருகினில் அவள் புகைப்படம் இருக்க.,
மேகத்தூறலில் துவட்டி போட்ட சிவந்தமண்னாய்
அது மின்னியிருக்க அக்கணம் வேர்த்திருக்கும்
காணீர் அவள் முகத்தினிலே!

உறங்கும் போது உடனிருந்து அவளின் துடிக்கும்
இதயத்தின் இசை கேட்டு வாழ்ந்திருக்க ஆவளுடன்
தொடர்ந்து போய் தோற்றுவிட்டேன்
என்னை மறந்தது கண்டு

சுவாசித்துக் கொண்டிருந்த நேரத்தில் எனக்கும்
கொஞ்சம் என்றவளிடம் உனக்காக தான்
சுவாசிக்கிறேன் என்றதன் பொருள் புரியாமல்
இறவள் வாங்கிய இதயத்தை இடுகாட்டில்
வைத்துவிட்டு போனது காணீர்

உடன் வருவாள் என்றென்னினேன் ஆனால் காதலை
கொன்று உடன்கட்டை ஏற்றிவிட்டால் இனி இந்த
வாழ்வெதற்க்கு என்றுவீழ்ந்து விட்டேன்....

கனவு - காதல் - சோகம்



மெட்டிசைத்து பாட்டெழுதும் காவியமாய் காதல்!
கண்டோர் கண்பட வளர்ந்து வந்த காதல்!
இடையில்லா தொடர்ந்து வந்த பாசம்
மாறி மாறி பகிர்ந்து கொண்ட பரிவர்த்தணை
கை கோர்த்து  தொடர்ந்து போய் தொட்டு வந்த வானம்
விடியலைக்கூட விரட்டியடித்த சொப்பணம்
தொட்டு பேச தட்டி தவிர்த்ததால் கொண்ட ஊடல்
இணையாவிடில் சாவதென்று சபதமிட்ட காதல்
இந்த இரண்டடுக்கு இதயங்கள் இன்று
பிரிந்ததென்ன சோகம்!!!

ஆறுதலாய் - நினைவுகள்


பிரிந்தவள் மகிழ்வுடன் இருப்பாள் என்றிருந்தேன்
மனமொடிந்து போயிருந்தாள்! - காரணம்
புறியவில்லை! ஏனென்று கேட்டதும் அவள்
கண்ணீரில் பதில் சொன்னாள் - இருந்தும்

எனக்காக அழுகின்றாளா அல்லது என்னால்
அழுகின்றாளா எனவும் புறியவில்லை
இன்னமும் நேசிக்கின்றேன் யென்று எனது
கண்ணீர் துளிகள் காட்டிக்கொடுத்தது -  

காலப்போக்கில் பயணம் தொடர்ந்து இருவேறு 
பாதையில் சென்றுவிட்டோம் - இனி 
தொடறாது பழைய நிகழ்வுகள்....!

என்றும் அவள் மகிழ்ந்திருக்க வேண்டுகின்றேன்
வாழ்வு செழிக்க பிரார்த்திக்கின்றேன்! அவளின்
சோகமான தருணங்களில் என் நினைவுகள் ஒரு கணம்
அவளுக்கு ஆறுதல் தரட்டும் தோழமையுடன்...!

அழகுத் தோரணை



முத்தமிழே தேன் சுவையே சின்னஞ்சிறு பைங்கிளியே
அழகாய் சிரிப்பது உன் புதுமொழியோ? - பூங்காற்றே
மலர் முகமே உன்னை வாரியாணைக்க தோனுதம்மா
வண்ணப் பூங்காவனம் உன் இருப்பிடமா வண்டுகள்
தேனெடுக்க பூத்திருக்கும் புது மலரோ?!


கண்டு நாம் மனம் குளிர நீ பிறந்ததென்ன பொற்காலமோ
வானுயர வளர்த்திவிட தந்தையுண்டு அன்பின்
எல்லை வரை கூட்டிச்செல்ல அன்னை உன்னுடன் உண்டு
தாலாட்டி தோழ் சுமக்க நல் உறவும் உண்டு என்றும் சிரித்து
மகிழ்ந்திரு வானத்து முழுமதியே!!!


வர்ணிக்க வர்த்தை தேட நாட்களை சேகரித்து
நாளொரு பொழுதய் வாழ்த்திடலாம் அழகாய் பூத்திருகும்
இந்த புது மலரை! உன் மழலைக் குரல்தனில்
குயில்களும் மெட்டெடுக்கும் இந்த கவிக்குயிலும்
பாட்டெடுக்கும்!!!


நிலவு காட்டி சோறூட்ட அன்னை உன்னிடம்
எத்தனிக்க உண்ண மறுத்து தத்தித்தாவி எட்டி
மறையும் உன் சுட்டி வேலைகள் குட்டி மான்களின்
அழகுத் தோரணையோ? கிட்டவாடி என் செல்லமே
மொட்டவிழும் பூ முகமே!!!


அன்னை அழைக்க சோற்றுடன் அன்பையும்
உடன்கலந்து உண்டு வாழ்க
நீடூழி வாழ்க!!!