கவிக்குயில்கள்: February 2011

S

அழகுத் தோரணை



முத்தமிழே தேன் சுவையே சின்னஞ்சிறு பைங்கிளியே
அழகாய் சிரிப்பது உன் புதுமொழியோ? - பூங்காற்றே
மலர் முகமே உன்னை வாரியாணைக்க தோனுதம்மா
வண்ணப் பூங்காவனம் உன் இருப்பிடமா வண்டுகள்
தேனெடுக்க பூத்திருக்கும் புது மலரோ?!


கண்டு நாம் மனம் குளிர நீ பிறந்ததென்ன பொற்காலமோ
வானுயர வளர்த்திவிட தந்தையுண்டு அன்பின்
எல்லை வரை கூட்டிச்செல்ல அன்னை உன்னுடன் உண்டு
தாலாட்டி தோழ் சுமக்க நல் உறவும் உண்டு என்றும் சிரித்து
மகிழ்ந்திரு வானத்து முழுமதியே!!!


வர்ணிக்க வர்த்தை தேட நாட்களை சேகரித்து
நாளொரு பொழுதய் வாழ்த்திடலாம் அழகாய் பூத்திருகும்
இந்த புது மலரை! உன் மழலைக் குரல்தனில்
குயில்களும் மெட்டெடுக்கும் இந்த கவிக்குயிலும்
பாட்டெடுக்கும்!!!


நிலவு காட்டி சோறூட்ட அன்னை உன்னிடம்
எத்தனிக்க உண்ண மறுத்து தத்தித்தாவி எட்டி
மறையும் உன் சுட்டி வேலைகள் குட்டி மான்களின்
அழகுத் தோரணையோ? கிட்டவாடி என் செல்லமே
மொட்டவிழும் பூ முகமே!!!


அன்னை அழைக்க சோற்றுடன் அன்பையும்
உடன்கலந்து உண்டு வாழ்க
நீடூழி வாழ்க!!!