கவிக்குயில்கள்: August 2010

S

நெருஞ்சி முற்கள்

உனக்கென்ன சொல்லிவிட்டாய்
பிரிந்து விடலாம் என்று
வலி எனக்குதான் தெரியும்.

நெருஞ்சி முற்கள் கொண்டு இதயத்தை
கீறிவிட்டாய் வலியோடுதான் துடிக்கின்றது
இதயம் ஒவ்வொரு நொடியும்.

அழுது புலம்ப என்னில்
கண்ணீர் இல்லையடி என் உயிரே என்னை
கொன்று விட்டதா?

வலியோடுதான் துடிகின்றது இதயம்
ஒவ்வொரு நொடியும்!!!

மௌனமான நேரம்

மௌன மொழியின்
அர்த்தங்கள் பல நூறு,
அதை இடம் பார்த்து 
அறியாவிடில் பொருளேது...!

இன்பமான நேரத்தில் மௌனம்
சம்மதம்!!

உண்மையான சொந்தங்கள்
பிரியும் போது மௌனம்
துன்பம்!!

காதலில் மௌனம்
சித்ரவதை!!

தோல்வியில் மௌனம்
பொறுமை!!

வெற்றியில் மௌனம்
அடக்கம்!!

இறுதியில் மௌனம்
மரணம்!!

தினந்தோறும்

காகித ஓடம் கரை சேருமா கண்ணா
இனி என் பசியாறுமா? - பெற்றெடுத்த பிள்ளைகள் 
மாடி வீட்டிலே தூக்கி வளர்த்த கைகள் குடிசை
வீட்டிலே தாய் பாடிய தாலாட்டெல்லம் குப்பை
மேட்டிலே..!!

வாழ்க்கை ஒரு வண்டி சக்கரம் தானடா புத்தனும்
சித்தனும் கற்றது தானடா வாழ்கை மகனே
நீ வாழ்க பல்லாண்டு என குடிசை வீட்டு

பூந்தொட்டி மாடி வீடு பண மரத்தை பார்த்து வாய் மனக்க வாழ்த்தி வந்தமர்ந்தது தன்
இருப்பிடம் தேடி

வேலையை தொடங்கியது கால்வயிறு கஞ்சி குடிக்க
"ஐயா பிச்சை போடுங்க" என்று
தினந்தோறும் என் பேருந்து பயணத்திற்கு
முந்தைய காட்சி இது

பட்டொளி வீசி பறக்கட்டுமே

தேசம் பிழைத்தது நமக்கு புது நேசம் கிடைத்தது!! -
கத்தியின்றி ரத்தமின்றி அகிம்சை மந்திரம் கொண்டு
மூவர்ணக் கொடி பாதி வானில் பறக்கும் அழகு பாரீர்

என் பாரத தாய் மூவர்ண சேலை கட்டி
ஒய்யாரமாய் பாரத புகழ் பாட ஆழ்கடல்
சங்கொன்று முழங்குது பாரீர்!!!

காவி நிறம், தூய்மையையும் கடவுளையும்
வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும்
பச்சை நிறம், புணர்ப்பையும், செம்மையையும்

எடுத்துரைத்து வர்ணகொடி ஏருது பாரீர்....
அர்த்தமில்லா வெள்ளையன் கொடி இறங்குது பாரீர்
வெள்ளை புழுக்களை ஓட ஓட சுட்டெரித்த

சூரியன் பாரதியும், அகிம்சை கொண்ட காந்தி மகானும்;
ஆங்கிலவனை எதிர்த்து எதிர் வணிகம் செய்த
கப்பலோட்டிய தமிழனும் பாரத தாயின்

ஒற்றை பிரசவ பிள்ளைகள்; அது மட்டுமா
பஞ்சாப் சிங்கன், தமிழ்நாட்டில் திருப்பூர் குமரனும்
அவளுக்கு சுக பிரசவம் தான் - இவர் தம்

முயர்ச்சிதனில் பெற்று வந்த பேறு நம் தேசிய
கொடி பட்டொளி வீசி பறக்கட்டுமே சுதந்திரமாய்!!
பெற்ற சுதந்திரத்தை காத்திடுவோம் நிரந்திரமாய்!!!

தமிழா! தமிழா!

கல்லுக்கு உளி கொண்டு
வலி கொடுப்போம் - சிலை ஒன்றை
வடித்தெடுப்போம்!

சொல்லுக்கு கவியென்று பெயர்
கொடுப்போம் - கரு மை
கொண்டு எடுத்துரைப்போம்!

வயல் சேர் கொண்டு கால் நனைப்போம்
வலக் கரம் கொண்டு சோறெடுப்போம்!
நற் சொல்லொன்று கூறிடுவோம் - சங்கே
முழங்கென்று பாடிடுவோம்!

செம்மொழியாம் எம்மொழி தங்கத் தமிழன்
நாமென்று பாடிடுவோம்!
பாரதி; கண்ணதாசனும் கம்பனும் எம் நாடென்று
நா மணக்க நாம் உரைத்திடுவோம்!

கமகமக்க வாய்ருசிக்க வந்தோர்க்கு விருந்தொன்று,
படைத்திடுவோம் எந்நாடென பிறநாட்டவர் கேட்டால் - நாம்
வாழ்வது தமிழ் நாடென
மார் நிமிர்த்தி சொல்லிடுவோம்!

என் இரண்டாவது மரணம்

மது கொண்டு மங்கையை மறக்க சிறு முயற்சி -
மரணத்திற்காகவும் தான்!!!

நீ மறந்து போ! என்றதும் மரணித்துப் போனது
என் ஜீவன் அன்றே!

ஊண் கொண்டு உடல் மட்டும் வாழ்கின்றது. - இனியவளே என்

இரண்டாவது மரணம் நீ அறியாமலே ஆகட்டும்
சிதையூட்டிய என்னுடல் கண்டு நீ
அழுவது கூடாது கண்மணியே!!

உனக்காக நானிருக்க

என் காதலா என்றுரைத்த வார்த்தைகள் இன்றும்
ஒலித்துக்கொண்டு தான் இருக்கின்றது - உன்னை பார்த்த
நாட்களை விட உன்னுடன் பேசிய வார்த்தைகள் அதிகம்
என் செல்பேசிக்கு தெரியும் அந்த மணி கணக்கு!!!

நாளொரு பொழுதாய் என்னை விட என் செல்பேசி அதிகம்
எதிர் பார்த்தது உன் அழைப்பு மணி ஒழிக்க.
பூவிதழ் விரிந்த வார்த்தைகள், தாமரையாய் மலர்ந்த முகம்
பார்க்க துடித்த கண்கள் பழகிப்போன பாசைகள் மிச்சம் வைத்த
முத்தங்கள் தலைகோதும் விரல்கள்...அடடா

"பார்க்கணும் போல இருக்குனு" அழுது கொண்டே சொன்னாயடி
அன்று பார்த்திருந்தால் இன்று பிரிந்திருபோமா? - விழிகளில்
வழியும் கண்ணீரை தடுக்க முடியவில்லை...இன்னும் அழுது
கொண்டு தான் இருக்கின்றேன்!!! - அன்புள்ள காதலியே

கண்ணீரில் மிதந்தாயடி காற்றோடு கரைந்தாயடி கனவினில்
நிலைத்தாயடி ஆறுதல் சொல்ல யாரும் இல்லை...
எதற்காகவோ அன்று நீ சொன்ன "அழாதே உனக்காக
நானிருக்கையில்" எனும் வார்த்தைகளே இன்று ஆறுதலாய்!!!

எனக்கு மட்டும் ஏன் மரணம்

அன்பே என் அன்பே என்றுரைத்த இதழ்களில்
மறந்து விடு என்று நெருப்பினை கொட்டி விட்டாயடி!!
எரியுது எரியுது என்னுடல் உயிருடன் எரியுது

வலியிது வலியிது காதல் போகும் வலியிது!!
"நம் மரணம் கூட ஒன்றாகத்தான்" என்றவள் வார்த்தையில்
நெருப்பின் அனல்கள் மறந்து விடு என்று!!!

இரண்டு உடல்களின் நான்கு இதழ்களில்
முத்தமிட்ட சத்தம் கூட இன்னும் மறையவில்லை
எனக்கு மட்டும் ஏன் மரணம் தந்தாயடி?