கவிக்குயில்கள்

S

எல்லாம் சுகமே!














சுமை என்று நினைத்தால் அது
நினைவுகள் மட்டுமே....

சுகமாகத்தான் இருக்கின்றாய் நீ
என் நெஞ்சுக்குள்ளே....

விழிகளில் உன் உருவம் கொண்டு
வழியெங்கும் உன்னுடனே

பயணிக்கின்றேன்...!

காதல்

ஆத்ம ஆனந்தம்,
நெஞ்சில்
என்றும் பரவசம்,

இனம் புரியாத மகிழ்ச்சி,
எப்போதும்
புன்னகை,

தேடிப்போகாத நிம்மதி,

இவையெல்லாம்,
ஒரு உறவின்
பின்னால் - அது,

காதல்...!

கனவுகள்


 
நீ இங்கே தருகிறாய்
கனவுகள்....

என்னுள்ளே ஒவ்வொரு நொடியும்
கலவரம்....

என்றென்றும் உந்தன்
சொப்பணம்.....

கனவுகளே....நினைவுகளே....
பிறந்திடுங்கள்....

இது உங்கள் தேசமே
இனியென்றும் நேசமே....

காதலே....கவிதைகளே.....
மலர்ந்திடுங்கள்...

எங்கெங்கோ பறக்கிறேன்...
அதிகாலை மேகமே உன்னுள்ளே
மிதக்கிறேன்....

கனவுகளே....
நினைவுகளே...

உன்னுடன் ஓர் நாள்


உண்மையில் ஓரு நாளாவது உன்னுடன்

வாழ ஆசைப் படுகின்றேன்!

காமம் கலக்காத காதலுடன்!

கரைந்து விழும் கண்ணீரை கூட
சேர்த்து வைத்திருக்கின்றேன்!

ஆறுதலாய் உன் விரல்கள் துடைத்துவிடும்
என்பதற்க்காக!

உன் மடியில் கண்னுறங்க என் உறக்கங்களையெலாம்
சேர்த்து வைத்திருக்கின்றேன்!

நீ ஊட்டிவிடும் ஒரு வாய் சோற்றிர்க்காக எனது
பசியைக் கூட தாங்கியிருக்கின்றேன்!

உண்மையில் ஓரு நாளாவது உன்னுடன்
வாழ ஆசைப் படுகின்றேன்!

அப்படி என்ன மாயம் செய்தாயடி...!?


உன் பெயரை எழுதிவைத்த இடமெல்லாம்
பூக்களாய் முளைக்குதே

உன் பெயரில் அப்படி என்ன மாயம்
செய்தாயடி...!?

பூக்களுக்கு கூட பொறாமை தான் உன்
புன்னகையை பார்க்கும் பொழுது....

அப்படி என்ன மாயம் செய்தாயடி
உன் புன்னகையில்

வெட்கத்தால் உன் முகம் சிவக்கும் போது,
மருதாணி கூட உன்னை கண்டு
இன்னும் சிவக்கின்றதே....

அப்படி என்ன மாயம் செய்தாயடி
உன் வெட்கத்தில்

உன் இதழ்களில் நான் அள்ளிப்பருகிய முத்தம்
தித்திப்பாய் என் இதழ்கள் மீண்டும் வேண்டும்
என்று கேட்கின்றதே....

அப்படி என்ன மாயம் செய்தாயடி
உன் செவ்விதழ் முத்தத்தில்...