உண்மையில்
ஓரு நாளாவது உன்னுடன்
காமம்
கலக்காத காதலுடன்!
கரைந்து
விழும் கண்ணீரை கூட
சேர்த்து
வைத்திருக்கின்றேன்!
ஆறுதலாய்
உன் விரல்கள் துடைத்துவிடும்
என்பதற்க்காக!
உன் மடியில்
கண்னுறங்க என் உறக்கங்களையெலாம்
சேர்த்து
வைத்திருக்கின்றேன்!
நீ ஊட்டிவிடும்
ஒரு வாய் சோற்றிர்க்காக எனது
பசியைக்
கூட தாங்கியிருக்கின்றேன்!
உண்மையில்
ஓரு நாளாவது உன்னுடன்
வாழ ஆசைப்
படுகின்றேன்!